ஒட்டன்சத்திரம், நவ.11: ஒட்டன்சத்திரம் நகர்மன்ற கவுன்சில் கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகர்மன்ற கவுன்சில் கூட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் ஸ்வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாதாந்திர வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொறியாளர் சுப்பிரமணியபிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி, வருவாய் ஆய்வாளர் விஜய் பால்ராஜ், உதவியாளர் அருள்முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
+
Advertisement

