நத்தம், அக். 11: நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட குழுவினர் நேற்று நத்தம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது லிங்கவாடி பகுதியில் முனியசாமி என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் அங்கு சென்று சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement