பழநி, அக். 11: பழநியில் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பிற்கான மாநில தலைவர் பழனிசாமி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநியில் உள்ள சாலையோர உணவு கடைகளில் வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்துதை தடுக்க வேண்டும். அதிக பக்தர்கள் வரும் பழநி நகரில் கழிப்பிடங்களை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும். உணவு பொருட்களின் விலையை கண்காணிக்க வேண்டும். பழநி- சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும். பழநி நகரில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். அடிவார பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
+
Advertisement