வேடசந்தூர், அக். 10: திருச்சி மோளாவாளாடியை சேர்ந்தவர் கண்ணன் (24). இவர் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் விடுதியில் தங்கியபடி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேடசந்தூர் வந்து விட்டு, மீண்டும் நூற்பாலை விடுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகம்பட்டியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (19), வினோத் பாண்டி (19) கண்ணனை கீழே தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த பணம் ரூ.1000 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
+
Advertisement