கொடைக்கானல், அக். 10: கொடைக்கானலில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூரில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னவனூரில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பிபின் (29) ஆலப்புழாவை சேர்ந்த மாகின் (29) ஆகியோர் தங்கியுள்ள வாடகை வீட்டில் சோதனை நடத்திய போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.