பழநி, செப். 10: பழநி மலைக்கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று சாமி தரிசனம் செய்தார். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் கோவையில் இருந்து காரில் பழநி வந்தார்.
கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரச்சன்னா, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் வரவேற்றனர். ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்று போகர் சன்னதியில் வழிபாடு செய்தார். தொடர்ந்து சாயரட்சை கலந்து கொண்டு முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்து, தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தார். பின்னர் ரோப்கார் மூலம் கீழிறங்கிய அவர் தண்டபாணி நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் கார் மூலம் மீண்டும் கோவை கிளம்பி சென்றார்.