திண்டுக்கல், அக். 9: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்நிலையில் பட்டாசு கடைகளில், அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி என்றதும், புத்தாடையும், பட்டாசும், இனிப்பும்தான் நினைவுக்கு வரும். இத்தகைய தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், மாவட்டத்தில் பட்டாசு கடைகளுக்கு ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், பட்டாசு கடைகளை அமைக்கத் தொடங்கி உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பட்டாசு கடைகள் உரிமம் பெற்ற வளாகத்திலேயே செயல்படுவதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை தீயணைப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும். பட்டாசுகளின் ஆபத்தான தன்மை குறித்து, விற்பனையாளர்கள் மற்றும் பணியாட்களுக்கு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும், பட்டாசு பாக்கெட்டுக்கள் மற்றும் பெட்டிகளை கையாளுவது குறித்த பயிற்சியும் அளிக்க வேண்டும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை பட்டாசு விற்பனையாளர்கள் முறையே கடைபிடிக்கப்படுகிறாதா என்பதை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement