நிலக்கோட்டை, அக். 8: நிலக்கோட்டை ஒன்றியம் நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட உச்சணம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் (பொ) கணேசன் வரவேற்றார்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 500க்கும் மேற்பட்ட மனுக்களை அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பின்னர் 20க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுபட்டா மாறுதல், மின் இணைப்பு, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை பயனாளிகளிடம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சவுந்திரபாண்டியன் வழங்கினார்.
இதில் இளைஞரணி அமைப்பாளர் செம்பர் சுரேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் பெனிட், தகவல் தொழிநுட்ப அணி அமைப்பாளர் பதினெட்டாம்படி, கட்சி நிர்வாகிகள் அழகேசன், ஆரோக்கியம், தங்கவேல் பால்ராஜ், குமரவேல், கணேசன், தங்கவேல், ராஜேந்திரன், நாகரத்தினம், சேகர், அஜித், சுப்ரமணி, முருகேசன், குணா, ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.