ஒட்டன்சத்திரம், அக். 8: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் இன்று (அக்.8ம் தேதி, புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை கள்ளிமந்தயம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்ட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கள்ளிமந்தையம் உதவி செயற்பொறியாளர் சந்தன முத்தையா தெரிவித்துள்ளார்.
+
Advertisement