நத்தம், ஆக. 8: நத்தம் அருகே பரளி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (31) காய்கறி வியாபாரி. இவர் கடந்த ஜூலை 17ம் தேதி டூவீலரில் வத்திபட்டிக்கு சென்ற போது பேட்டைக்குளம் பகுதியில் 3 பேர் வழிமறித்து அவரிடமிருந்த 2 பவுன் செயின், ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜாங்கம் அளித்த புகாரில் நத்தம் எஸ்ஐ கிருஷ்ணகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட லிங்கவாடியை சேர்ந்த மாதேஷ் (20) என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.