நிலக்கோட்டை, நவ. 7: நிலக்கோட்டை ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் தெற்கு தெருவில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பரிந்துரைப்படி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுபடி ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டன் தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், அம்மாவாசி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கர்ணன், நிர்வாகி ராஜேந்திரன், அரசு ஒப்பந்ததாரர் பழனிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
