திண்டுக்கல், ஆக. 6: திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கோட்டூர் ஆவாரம்பட்டியில் உள்ளது ஆதிதிராவிடர் நகர். இப்பகுதி மக்கள் மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்து தர கோரி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அமைச்சர், உடனே அப்பகுதி மக்களுக்கு மயானத்திற்கு இடவசதி செய்து கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து மாலையணிவித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அமைச்சர், கலைஞரின் கனவு இல்லம் கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட அவை தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார்நத்தம் முருகேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அக்பர், இளங்கோவன் கலைராஜன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், பேரூர் செயலாளர்கள் அகரம் ஜெயபால், இளங்கோவன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.