பழநி, நவ. 5: பழநி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உணவு கலப்படத்தை கண்டறியும் பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமில் உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உணவு பொருட்களில் கலப்படம் செய்திருந்தால் கண்டுபிடிக்கும் முறை, கலப்பட உணவுகளை உண்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சத்தான உணவுகள், இயற்கை உணவுகளின் நன்மைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
+
Advertisement
