நத்தம், நவ. 5: நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் வத்திபட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபாரதம் விதித்து கடைக்கு சீல் வைத்தார்.
