தேவதானப்பட்டி, டிச. 4: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விசால் (17). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். காட்ரோட்டை கடந்து பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விஷால் திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

