நத்தம், டிச. 4: நத்தம் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அரசு திருமண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகுரு தலைமை வகித்தார். தாசில்தார் ஆறுமுகம், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் அனைத்து கட்சிகளை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் விடுபட்ட மற்றும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் வாக்காளர்களை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

