பட்டிவீரன்பட்டி, நவ. 1: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. மன்ற தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். இக்கூட்டத்தில் நகர்புற பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து பயனாளிகள் தேர்வு செய்தல்,
2ம் நம்பர் ரேஷன் கடை அமைந்துள்ள தெருவில் உள்ள தண்ணீர் தொட்டி பொதுமக்களுக்கும், ரேஷன் கடைக்கு வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்களுக்கும் இடையூறாக இருப்பதால் அதனை அகற்றிவிட்டு வேறு இடத்தில் மாற்றம் செய்தல், அம்பேத்கர் நகரில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய கூடத்திற்கு வாடகை நிர்ணயம் செய்தல் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் ஆனந்த் நன்றி கூறினார்.
