நிலக்கோட்டை: சின்னாளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஷா. இவர் கடந்த வாரம் மதுரை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் நடந்த தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
இவருடன் முறையே இரண்டு, மூன்றாமிடம் பிடித்து 3 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து வரும் ஜன.5ம் தேதி முதல் ஜன.9ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற உள்ள 14 வயது முதல் 19 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் ஹரிஷா உள்பட 3 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனையடுத்து மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பள்ளி முதல்வர் திலகம், உதவி தலைமை ஆசிரியை வெண்ணிலா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.