பழநி, ஜூலை 24: பழநி கோயிலில் காலியாக பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2006ம் ஆண்டு முதல் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் குழுமம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதுபோல் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மற்ற போட்டி தேர்வுகளை போல எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும் நிரப்ப வேண்டும்.
மேலும், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நிலையை பின்பற்ற கூடாது. அவ்வாறு பின்பற்றுவதாக இருந்தால் புதியதாக அறிவிக்கப்பட்ட தேர்வாணைய தலைவர் மூலம் நிறைவேற்ற வேண்டும். மேலும், போட்டிகளை காட்டிலும் நேரடி நியமனே சிறந்தது என்பதால் உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.