நத்தம், ஜூலை 25: நத்தம் அருகே கரடிப்பட்டியை சேர்ந்தவர் எழுவன் (70). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். எழுவன் சம்பவ நாளன்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார். சிறிதுநேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது 3 மர்ம நபர்கள் ஆடுகளை திருட முயன்றது தெரியவந்தது. உடனே எழுவன் ஊர்காரர்களை அழைக்க கூச்சலிட்டுள்ளார். இதனால் மூவரும் எழுவனை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.இதுகுறித்து எழுவன் அளித்த புகாரின் பேரில் நத்தம் எஸ்ஐ தர்மர் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வருகிறார்.