திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது மாவட்ட மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. துவக்க விழா நிகழ்வாக எம்விஎம் அரசு கலைக்கல்லூரி முன்பு பேரணி நடந்தது. பேரணியை முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் உள்ள எஸ்எஸ்எஸ் மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.
இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, சங்கத்தின் அகில இந்திய துணைதலைவர் சுகந்தி, மாநில தலைவர் வாலண்டினா, செயலாளர்கள் சசிகலா, ராணி, மாவட்ட தலைவர் சுமதி, செயலாளர் பாப்பாத்தி, பொருளாளர் பாண்டியம்மாள், வரவேற்பு குழு செயலாளர் பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.