பழநி, ஆக. 2: கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பயன்படுத்துவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இவற்றை பழநி பகுதியில் உள்ள மொத்த வியாபார கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தி வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளின் மீது அபராதம், சீல் வைப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.