திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் பொதுக்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் கிராஸ் அவை தலைவர் நாட்டாமை காஜா மைதீன்,மாவட்ட துணை தலைவர் சுந்தரமகாலிங்கம், உதவி அவை தலைவர் ஷேக் தாவூது, செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சுசீலா மேரி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் சரவணன் வாழ்த்தி பேசியதாவது: செஞ்சிலுவை சங்கத்தில் ரத்த தானம், ஆம்புலன்ஸ் சேவை, கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கி 106 உயிர்களை காப்பாற்றி உணவு பொருட்கள், நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற எண்ணற்ற சேவைகள் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.