Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநியில் தொழில் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு சீல்: நகராட்சி எச்சரிக்கை

பழநி, ஜூலை 29: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள், சிறு, குறு தொழில் நடத்துபவர்கள், பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள், அரசு கட்டிடங்கள்- அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், மடங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள் மற்றும் இதர தொழில்கள் செய்யும் அனைத்து உரிமையாளர்களும் நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் அளித்து சுகாதார சான்று மற்றும் தொழில் உரிமம் பெற்று கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன்படி பிரிவு 101, 102, 103, 104, 105, 106, 107, 134ன் படி பூட்டி சீல் வைக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.