வேடசந்தூர், ஆக. 4: அய்யலூர் பேரூர் திமுக சார்பில் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் கருப்பன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல், தலைமை அறிவுறுத்தலின்படி கட்சி வேலைகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement