திண்டுக்கல், ஆக. 3: திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். இவர், கடந்த ஜூலை 3ம் தேதி மடூர் பிரிவில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 டூவீலர்களில் வந்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து 10 பேரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதில் தீத்தாம்பட்டியை சேர்ந்த கஜேந்திரன் (23), மோகன்ராஜ் (21), கணேஷ்குமார் (33) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சரவணனுக்கு, எஸ்பி பிரதீப் பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், சாணார்பட்டி போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.