பழநி, ஆக. 3: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை கடை, ஹோட்டல், டீக்கடை, லாட்ஜ், திருமண மண்டபம், கறிக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில் செய்யும் வணிக நிறுவனத்தார் நடப்பு ஆண்டிற்கான தொழில் உரிமம் புதுப்பித்து, தொழில் வரித்தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தக்கூடிய உரிமத்தொகையில் 50% அபராத தொகையாக செலுத்த நேரிடும். மேலும், நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
+
Advertisement