திண்டுக்கல், ஜூலை 24: திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நேற்று முன்தினம் முதல் துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவிற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ் பாபு முன்னிலை வகித்தார். கண்காட்சியை உதவி ஆட்சியர் பயிற்சி வினோதினி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களான பேன்சி, கைவினை பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சிறுதானிய உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மென் பொம்மைகள், கவரிங் பொருட்கள் விற்பனைக்கு என 37 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை கல்லூரி மாணவிகள் பலர் பார்வையிட்டு பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.