வத்தலக்குண்டு, ஜூலை 25: வத்தலக்குண்டுவில் ஆட்டோ கவிழ்ந்து 6 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். வத்தலக்குண்டு பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் நேற்று பழைய வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை டிரைவர் முனியப்பன் (35) ஓட்டி வந்தார்.
வத்தலகுண்டு- பெரியகுளம் சாலையில் பயணிகள் விடுதி அருகே வந்த போது முன்னாள் சென்ற அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக வத்தலக்குண்டு ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்து வத்தலக்குண்டு எஸ்ஐ ஷேக் அப்துல்லா வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.