நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து; ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு: போலீசார் விசாரணை
நிலக்கோட்டை, செப்.30: நிலக்கோட்டையில், செல்போன் கடையை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் மாதவன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில், கடையின் பூட்டை உடைத்து கத்தியுடன் உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும், கடையிலிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர், நிலக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.