நத்தம், நவ. 28: நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவர் கடந்த நவ.25ம் தேதி நத்தத்தில் வெங்காய கடையில் வேலை பார்த்து விட்டு மாலையில் ஊருக்கு செல்ல பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காயமடைந்த செல்லம்மாளை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

