திண்டுக்கல், அக்.28: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அக்.27 முதல் நவ.3 வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு, திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார், துண்டு பிரசுரங்கள் மூலம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் லஞ்சம் வாங்குவது குற்றம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் லஞ்சம் குறித்து புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
+
Advertisement
