ஒட்டன்சத்திரம், செப். 24: ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனச்சரகர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதிகளில் சிறுத்தை ஒன்று உலா வருவது போல் சமூக வலைதளங்களில் போட்ேடா பரப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் போட்டோ கடந்து 3 மாதங்களுக்கு முன்பு மைசூர் பகுதியில் எடுக்கப்பட்டது. அந்த போட்டோவை வெளியிட்டவர் மைசூரில் உள்ளார். ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட குழந்தை வேலப்பர் மலை உள்ளிட்ட அனைத்து மலை அடிவார பகுதிகளிலும் ட்ரோன் மூலமும், வாகனம் மூலமும் சென்று ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ளவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement