திண்டுக்கல், செப். 24: திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் திமுக சார்பில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஓரணியில் தமிழ்நாடு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மண்டல தேர்தல் பொறுப்பாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை வகித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசின் சாதனை திட்டங்களை திண்ணை பிரசாரம் மூலம் வீடுகள்தோறும் எடுத்து செல்ல வேண்டும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement