பழநி, செப். 23: பழநி டவுன், சண்முகபுரம் திருவள்ளுவர் சாலையில் தொல்காப்பியன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியின் சமையல் கூடத்தில் இருந்த சிலிண்டரில் நேற்று திடீரென தீ பற்றியது. தீ மளமளவெனப் பற்றி கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. திடீரென தீ பற்றியதால் பேக்கரிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலையை அலுவலர் காளிதாஸ் தலைமையில் விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினரின் துரிதமான செயல்பாட்டால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
+
Advertisement