பழநி, ஆக.19: பழநி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றுப் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், 48 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் அரசு ஊழியர் சங்க பழநி வட்ட கிளை பொருளாளர் ராமசாமி, சாலை ஆய்வாளர் சங்க நிர்வாகி வீரய்யா, மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம், கோட்ட பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பணியாயர் சங்கத்தினர் முகமூடி அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.