பழநி, செப். 14: பழநியில் அடுத்தடுத்த டீக்கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி உழவர் சந்தை ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (8). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணேசன் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் அருகில் உள்ள விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான டீக்கடையிலும் கல்லா உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
தகவலறிந்ததும் பழநி நகர் எஸ்ஐ சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 டீக்கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் பழநி பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.