பழநி, செப். 14: பழநி பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு யோகா, தியான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கான யோகாசன பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான தியான பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களுக்கு மனதை ஒருநிலைபடுத்துவதற்கான வழிகள், யோகசனத்தின் நன்மைகள், மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. சிவாலயா யோகாசன மைய நிறுவனர் சிவக்குமார் தலைமையிலான யோகா ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
+
Advertisement