பழநி, ஆக.12: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தும்பலப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (23). அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம், செங்கல் சூளையில் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
செங்கல் சூளையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அங்கு பணிபுரிந்த ஒடிசா மாநிலம், பாலாங்கி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் பாரிக் (43), அவரது 17 மற்றும் 14 வயது மகள்கள் ஆகிய 3 பேரை கீரனூர் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், தகாத உறவின் காரணமாக நடந்ததாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.