ஒட்டன்சத்திரம், டிச.9: ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜமணி, ஒன்றிய செயலாளர் சோதிஸ்வரன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, ஒன்றியச் செயலாளர் தர்மராஜன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


