வடமதுரை, டிச.9: வடமதுரை தும்மலக்குண்டு சாலையில் வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நரிப்பாறை அருகே கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்த, வடமதுரை தெற்கு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அர்னால்டு(21), களஞ்சியம் தெருவை சேர்ந்த விஜய பிரகாஷ்(18) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 260 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement


