கோபால்பட்டி, டிச. 5: சாணார்பட்டி அருகே பஸ்சிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோபால்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை வையாளிப்பட்டி புதூரை சேர்ந்த தங்கராஜ் மனைவி அமராவதி (50). இவர் நேற்று காலை கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். கணவாய்பட்டி கருப்பு கோயில் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அமராவதி பஸ்ஸிலிருந்து எதிர்பாராத விதமாக படிக்கட்டு வழியே கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமராவதி உயிரிழந்தார் இது
குறித்து சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்.

