பழநி, ஆக. 5: மண்பாண்டங்களில் இயற்கையாகவே பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மண்பானை தண்ணீர் இயற்கையானது. குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து, நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம். மண் பானைகளில் சமைத்து சாப்பிட்டால் வியாதிகள் வராது. மண் பானை மருத்துவ குணமுடையது.
மண்பானை தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம் என இயற்கை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.