தர்மபுரி, அக்.31: தர்மபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். குறள் பேரவை பரமசிவம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மலர்வண்ணன் வாழ்த்தி பேசினார். பதிப்பாசிரியர் திருவேங்கடம் பங்கேற்று, திருக்குறளும் -வாழ்விலும் என்ற தலைப்பில் பேசினார். ரவீந்திர பாரதி விளக்கிப் பேசினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய மூன்றிலும் மதியரசி என்ற மாணவி முதல் பரிசு பெற்றார். கருத்தரங்கில் ஆசிரியர்கள் சிவகுமார், கார்த்திக், மோகன்குமார் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதுகலை தமிழ் ஆசிரியர் செந்தில் வரவேற்று பேசினார். தமிழாசிரியர் சம்பத் நன்றி கூறினார்.
+
Advertisement 
 
  
  
  
   
