தர்மபுரி, அக்.31: தர்மபுரி மாவட்டத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவுபடி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், எஸ்ஐகள் முகுந்தன், சண்முகம் மற்றும் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
+
Advertisement 
 
  
  
  
   
