தர்மபுரி, அக்.30: பாலக்கோட்டில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவேரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், நீர்நிலைகளை பாதுகாத்து குப்பை கொட்டாமல் இருக்கவும், நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டியும், பாலக்கோடு நதியில் கங்கை நீரை ஊற்றி சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. வழிபாட்டுக்கு மாவட்ட தலைவர் சங்கர் குருசாமி தலைமை வகித்தார். அகில பாரத ஐயப்பா சேவா சங்க நிறுவனர் ராமானந்த பூரி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு நகர பொதுமக்கள் முன்னிலையில் காவிரி நதி நீர் விழிப்புணர்வு ரதயாத்திரை நடந்தது. மேலும் வேணுகோபால ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
+
Advertisement
