அரூர், அக்.30: அரூர் அடுத்த கீரைப்பட்டியில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இங்கு அதே ஊரை சேர்ந்த கங்கம்மாள் என்பவர் கோயிலை நிர்வகித்து வருகிறார். கடந்த 28ம்தேதி, வழக்கம் போல் மாலை பூஜைகளை முடித்து, பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலில் கதவு உடைக்கப்பட்டு உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அரூர் காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரை அடுத்து, விசாரணை நடத்திய போலீசார் கோயில் உண்டியலை உடைத்து, பணம் திருடிய அரூர் பகுதியை சேர்ந்த தென்னரசு (18), ஆகாஷ் (22), ரேனுகான் (17), தினேஷ் (21) ஆகிய நால்வரையும் கைது செய்து உண்டியலில் திருடிய பணத்தை மீட்டனர்.
+
Advertisement
