அரூர், அக்.30: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் சரிதா(45), சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28ம்தேதி, உடல்நிலை சரியில்லாததால், தர்மபுரி மருத்துவமனைக்கு சென்று விட்டார். அன்று மாலை வீட்டிற்கு வந்த அவரது மருமகன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறியிருப்பதை பார்த்து, சரிதாவிற்கு தகவல் தெரிவித்தார். வீட்டிலிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த செயின், தோடு, வளையல் என 12 பவுன் மற்றும் அரை கிலோ வெள்ளி கட்டி கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சரிதா கொடுத்த புகாரின் பேரில், மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
