காரிமங்கலம், செப்.30: தர்மபுரி மேற்கு மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பிஎல்ஏ-2 வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் நடந்தது. தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், கண்ணபெருமாள் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனியப்பன் கூட்டத்திற்கு தலைமை வகித்து பிஎல்ஏ-2 வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் சீனிவாசன், விவசாய அணி குமார், இளைஞரணி மகேஷ்குமார், நிர்வாகிகள் கெளரி திருக்குமரன், சிவாஜி, பத்திரம் கோவிந்தசாமி, சரவணன், தங்கதுரை, கிருஷ்ணன், சுரேஷ், ஐடி விங் பரணி, சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement