காரிமங்கலம், ஆக.30: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில், சட்டவிரோத மண் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில்,a அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்குடன் இருந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி ஏரியில், இருந்து மண் எடுத்து சென்றவர்களுக்கும், விநாயகர் சிலை ஊர்வலமாக சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அனுமதி பெறாமல் மண் எடுத்து செல்வதாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில், இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார், இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+
Advertisement